ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு 740 கி.மீ. நீளம் உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் எல்லைக் கோட்டின் இரு பக்கங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம் அடிப்படையில் இருதரப்பினருக்கிடையே சண்டைகள் குறைந்தபோதிலும், அவ்வப்போது விதிமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவது அரங்கேறிவருகிறது.