ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோவ்ரி எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்புப்படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
போர் ஒப்பந்த கோட்பாட்டை மீறி பாகிஸ்தான் பாதுகாப்புப்படையினர் சிறிய ரக ஆயுதங்கள், வெடிகுண்டுகள் மூலம் இத்தாக்குதலில் ஈடுபட்டார்கள்.

இந்தத் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய பாதுகாப்புப் படையினர் திறம்பட செயல்பட்டனர்.
இரு நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச் சண்டை காலை 7.15 மணியளவில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நேற்று மாலையும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய பாதுகாப்புப்படை தக்க பதிலடி கொடுத்தது.