தமிழ்நாடு

tamil nadu

போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: பூஞ்ச் எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்

By

Published : May 20, 2020, 5:04 PM IST

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திவருகிறது.

Pakistan
Pakistan

போர்நிறுத்த ஒப்பந்தத்தைமீறி இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவது அண்மைக் காலங்களாக அதிகரித்துவருகிறது.

கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து இந்திய எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் தாக்குதல் சம்பவங்களை பாகிஸ்தான் ராணுவம் அரங்கேற்றிவருகிறது. இந்திய தரப்பிலும் இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், பூஞ்ச் மாவட்ட கிர்னி, கஸ்பா செக்டார் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து இந்திய எல்லைகள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளது. சிறிய ரக ஆயுதங்கள், ஷெல் குண்டுகளைக் கொண்டு இந்த தாக்குதல் சம்பவத்தை பாகிஸ்தான் நிகழ்த்தியுள்ளது.

முன்னதாக, இன்று காலை பூஞ்ச் மாவட்ட கிர்னி, தேக்வார் செக்டாரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோட்டுப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறும் பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:3ஆவது நாளாக அத்துமீறும் பாகிஸ்தான்: எல்லையில் பதற்றம்

ABOUT THE AUTHOR

...view details