ஜம்மு காஷ்மீர் மாநிலம், ராஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் (line Of Control), பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்தக் கட்டுப்பாட்டை மீறியதாக, பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
எல்லை மீறி தாக்கிய பாகிஸ்தான் ராணுவம்! - துப்பாக்கிச்சூடு
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ராஜோரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டை மீறி நேற்று (ஜூன் 15) பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது என பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது; 'சுந்தர்பானி பகுதியில் எல்லையைத் தாண்டி நேற்று (ஜூன் 15) பிற்பகல் 2.30 மணியளவில் சிறிய ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுக்கும். மேலும் எல்லை தாண்டியதாக துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.
இந்த ஆண்டில் ஜூன் 10 ஆம் தேதி வரை, கட்டுப்பாட்டை மீறி 2,027க்கும் மேற்பட்ட தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் செய்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் ராஜோரி, பூஞ்ச் என்ற பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்' எனத் தெரிவித்தார்.