இந்திய - பாகிஸ்தான் எல்லைக் கோட்டுப் பகுதியில் இரு நாட்டு பாதுகாப்புப் படைகளும் எல்லை அத்துமீறலில் ஈடுபடும்போது இரு பிரிவினருக்கும் மோதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். பாகிஸ்தான் பாதுகாப்புப் படை இரு நாட்களுக்கு முன்கூட காஷ்மீரையொட்டிய இந்திய எல்லையில் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
பாக். எல்லையிலிருந்து பொழிந்த குண்டுகள்... காணொலி வெளியிட்ட இந்திய பாதுகாப்புப் படை!
டெல்லி: கையெறி குண்டுகளை பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்திய எல்லைக்குள் வீசும் காட்சி இந்திய பாதுகாப்புப் படை தரப்பிலிருந்து காணொலி எடுத்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் 12ஆம் தேதி இந்திய எல்லைக்குள் கையெறி குண்டுகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து வீசியுள்ளனர். கேமராவில் பதிவாகியுள்ள இந்தக் காட்சியை இந்திய பாதுகாப்புப் படை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தக் கையெறி குண்டுகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் அல்லது பயங்கரவாதிகள் எறிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதற்கே இந்தச் செயல் அரங்கேறியுள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்தாண்டு மட்டும் சுமார் இரண்டாயிரம் முறை பாகிஸ்தான் பாதுகாப்புப் படை அத்துமீறியுள்ளது.