ஜம்மு காஷ்மீர், பாரமுல்லா மாவட்டம் உரி தாலுகா ஹாஜிபீர் பகுதி வழியாக இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான சர்வதேச எல்லைக்கோடு அமைந்துள்ளது.
இந்தப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் உடனடி பதிலடி கொடுக்கப்பட்டது.
இது குறித்து இந்திய கிராம மக்கள் தெரிவிக்கையில், “ரமலான் நோன்பு காலமென்பதால், காலை நோன்பு நிறைவேற்றும் கடமையில் நாங்கள் இருந்தோம். அந்த வேளையில் இந்தத் தாக்குதல் நடந்தது” என்றனர்.
கடந்த இரு மாதங்களாக ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருவது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: கரோனாவை சமாளிக்க தயாராகிறதா தடுப்பூசி? ஐசிஎம்ஆர் முன்னாள் இயக்குனர் பிரத்யேக பேட்டி