பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில தினங்களாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள சர்வதேச எல்லைக்கோட்டுக்கு அருகேயுள்ள இந்திய பகுதிகள் மீது தாக்குதல் நடத்திவருகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்துவருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (மே31) ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள இந்தியப் பகுதிகளான கிர்னி, காஸ்பா, தெக்வார் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது மாலை 7.50 மணிக்கு நடந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. முன்னதாக நேற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லியில் பாகிஸ்தான் உயர் அலுவலர்கள் கைது!