தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சக மாணவனால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! - சக மாணவனால் மாணவி பாலியல் வன்கொடுமை

இஸ்லாமாபாத்: வகுப்பில் படிக்கும் சக மாணவனால் பல்கலைக்கழக மாணவி, கூட்டுப் பாலியல் கொடுமைக்குள்ளான சம்பவம் பாகிஸ்தானில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது

Gang Rape
Gang Rape

By

Published : Oct 27, 2020, 8:23 PM IST

பாகிஸ்தான் பைசலாபாத்தில் உள்ள அரசு கல்லூரி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "என்னுடன் படிக்கும் ஷாகித் கான் என்ற மாணவன், சினியோத் என்ற கிராமத்திற்கு என்னை கடந்த அக்டோபர் 23ஆம் தேதி அழைத்துச் சென்றார் ‌.

லாகூரிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அந்தக் கிராமத்திற்கு, முகமது நபிகளின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக என்னை அழைத்துச் சென்றார்.

யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்ற அவர், தனது நண்பர்களுடன் துப்பாக்கி முனையில் வைத்து என்னை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் அப்பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். மருத்துவப் பரிசோதனையில் அப்பெண் பாலியல் வன்புணர்வுக்குள்ளானது தெரியவந்தது. முக்கியக் குற்றவாளியான ஷாகித் கான் கைதுசெய்யப்பட்ட நிலையில் மற்றவர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details