ஜம்மு- காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கும் நிலையில், பிரதமர் மோடி ஜம்மு- காஷ்மீரில் ஜனநாயகம் திரும்பியுள்ளதாக கூறியுள்ளார்.
ஆனால், அதனை மறுத்த உமர் அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, சோபியன் மாவட்டத்தில் வெற்றிபெற்ற வேட்பாளரை அப்னி கட்சியில் இணைய குதிரை பேரம் பேசப்பட்டதாக கூறிய அவர், அது தொடர்பான ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.
குப்கார் தீர்மானத்திற்கான மக்கள் கூட்டணியில் அங்கம் வகித்து வெற்றி பெற்ற வேட்பாளர்களை, ஜம்மு- காஷ்மீர் அரசாங்கம் காவல்துறையை வைத்து துன்புறுத்துவதாகவும், பாஜகவின் பி-டீமான அப்னி கட்சியில் சேர கட்டாயப்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.