ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ, ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. அதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அக்டோபர் 16ஆம் தேதி அவரைக் கைது செய்தது. இந்த வழக்கில் பிணை வேண்டி ப. சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். சிபிஐ வழக்கைத் தொடர்ந்து, இன்று அமலாக்கத்துறை வழக்கிலும் ப. சிதம்பரத்துக்கு பிணை கிடைத்தது. இன்று இரவு சுமார் 8 மணியளவில் அவர் சிறையிலிருந்து வெளியில் வந்தார்.
தேவையில்லாமல் சிதம்பரம் 106 நாள்கள் சிறையிலிருக்க நேர்ந்ததாகவும் நடைபெற்றுவரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க நாளை காலை 11 மணிக்கு ப. சிதம்பரம் நாடாளுமன்றத்துக்கு வரவுள்ளதாகவும் ப. சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.