புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேசன் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றவர் ரபியா. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கம் பெறவிருந்த இவருக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். குடியரசு தலைவர் சென்ற பின்னரே மாணவி நிகழ்வு அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டார்.
அனுமதி மறுக்கப்பட்ட மாணவி; ஆதரவாக குரல் கொடுத்த சிதம்பரம்! - புதுச்சேரி பல்கலைகழகம் மாணவி
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவிக்கு குடியரசு தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம், உரிமைகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பின்னர் இவர் மேடையில் ஏறி சான்றிதழ் மட்டும் பெற்றுக்கொண்டு, தங்கப்பதக்கத்தை வாங்குவதை தவிர்த்துவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புர்கா அணிந்திருந்ததால்தான் அரங்கைவிட்டு வெளியேற்றபட்டதாக ஆதங்கப்பட்டார். இதுகுறித்து சிதம்பரம், "தங்க பதக்கத்தை வென்ற ரபியாவுக்கு பட்டமளிப்பு விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அவரின் உரிமைகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல். அவருக்கு அனுமதி மறுத்தது யார்? மாணவியின் உரிமைகளை அலுவலர் அத்துமீறி மறுத்துள்ளார். அதற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: புர்கா அணிந்ததால் வெளியேற்றம்; தங்கப்பதக்கத்தை நிராகரித்த மாணவி!