தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு ஒரு கழுகுப் பார்வை! - ப சிதம்பரம்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தைச் சுற்றி சுற்றி அலைக்கழிக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கை நீதிமன்றம் எப்படி அணுகியது என்பது குறித்து கீழே காண்போம்.

p chidambaram

By

Published : Aug 21, 2019, 9:05 PM IST

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ.305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரத்தின் காலத்தில் இது நடந்ததால் அவரின் பெயரையும், அந்த நிறுவனத்தை நேரடியாகவோ, முறைமுகமாகவோ கட்டுப்படுத்தியதால் கார்த்தி சிதம்பரம் பெயரையும் சிபிஐ வழக்கில் சேர்த்தது. பல திருப்பங்களை கண்ட இந்த வழக்கை நீதிமன்றம் எப்படி அணுகியது குறித்து கீழே காண்போம்.

மே 15, 2017: ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

ஜூன் 16, 2017: அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்ல கார்த்தி சிதம்பரத்திற்கு உள்துறை அமைச்சகம் தடைவிதித்தது.

10 ஆகஸ்ட், 2017: சென்னை உயர்நீதிமன்றம் உள்துறை அமைச்சம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்தது.

14 ஆகஸ்ட், 2017: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.

18 ஆகஸ்ட், 2017: கார்த்தி சிதம்பரம் சிபிஐயிடம் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

11 செப்டம்பர், 2017: வெளிநாட்டில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் கணக்கில் வராத சொத்துகள் குறித்த விவரத்தை சிபிஐ, உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது.

22 செப்டம்பர், 2017: வெளிநாட்டில் உள்ள பல வங்கிக் கணக்குகளை கார்த்தி சிதம்பரம் மூடியதால், அவர் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

9 அக்டோபர், 2017: தன் மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக இங்கிலாந்துக்கு செல்ல அனுமதி வழங்க கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கேட்கிறார். இதனிடையே பாஜக அரசு அரசியல் நோக்கம் காரணமாக தன் மீதும், தன் மகன் கார்த்தி மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் தெரிவித்தார்.

20 நவம்பர், 2017: கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது.

28 பிப்ரவரி, 2018: கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். டெல்லி நீதிமன்றம் அவருக்கு ஒரு நாள் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கிறது.

23 மார்ச், 2018: சிறையில் 23 நாட்கள் இருந்த பிறகு, கார்த்தி சிதம்பரத்திற்கு பிணை வழங்கப்படுகிறது.

25 ஜூலை, 2018: சிதம்பரத்தை கைதுசெய்வதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம், காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கிறது.

11 ஆக்டோபர், 2018: கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டில் வைத்துள்ள ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துக்கள், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்குடன் தொடர்புடையவை என அமலாக்கத்துறை உத்தரவு பிறப்பிக்கிறது.

11 ஜூலை, 2019: மீடியா நிறுவனத்தின் பெரும் புள்ளியான இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறினார்.

20 ஆகஸ்ட், 2019: சிதம்பரத்தின் பிணை மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் கைது செய்யும் நடவடிக்கையில் சிபிஐயும், அமலாக்கத் துறையும் துரித நடவடிக்கையில் இறங்கின.

21 ஆகஸ்ட், 2019: தலைமறைவாக இருந்தார் என கருதப்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து, தனக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்குக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என விளக்கமளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details