மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் தெலங்கான மாநிலத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவரும், ஹைதராபாத் மக்களவை உறுப்பினருமான அசாசுதீன் ஓவைசி பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசினார்.
இந்தியாவுக்கு தேவை சௌகிதார் அல்ல; நேர்மையான பிரதமர் -ஓவைசி - நேர்மையான
ஹைதராபாத்: இந்தியாவுக்கு தேவை காவலர் அல்ல நேர்மையான பிரதமர் என ஓவைசி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், மோடி பிரதமராக இருக்கும்போதுதான் பதான்கோட், உரி, புல்வாமா போன்ற பல பயங்கரவாத தாக்குதல்கள் இந்தியாவில் நடந்ததாக தெரிவித்த அவர், எனவே மோடி என்ன விதமான காவலர் என கேள்வி எழுப்பினார்.
எனவே, இந்தியாவுக்கு தேவை காவலர் அல்ல, நேர்மையான பிரதமர் எனக் கூறியுள்ளார். 2007ஆம் ஆண்டு நடந்த சம்ஜஹவுதா குண்டுவெடிப்பு வழக்கில் தற்போது மத்திய புலனாய்வு அமைப்பின் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட அசிமானந்துக்கு எதிராக மேல்முறையிடு செய்ய மோடி தலைமையிலான அரசு தயாராக உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.