அசாம் குடிமக்கள் விவகாரம்:
அசாமில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களைக் கண்டறியும் பொருட்டு அந்த மாநிலத்தில் குடிமக்கள் தேசியப் பதிவேடு கொண்டு வரப்பட்டது. இதில், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்து 6 ஆண்டுகளாக வசித்து வரும் இந்துக்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பெளத்தர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
19 லட்சம் பேர் நீக்கம்:
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட குடிமக்கள் தேசியப் பதிவேடு வரைவு பட்டியலில் 40 லட்சத்திற்கும் அதிகமானவர்களின் பெயர்கள் அகற்றப்பட்டன. அப்போது பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தநிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிபட்டியல் கடந்த 30ஆம் தேதி வெளியானது. அதில் மொத்தம் 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேர் இறுதிப்பட்டியலில் நீக்கப்பட்டுள்ளனர்.
வரைவு பட்டியலில் நீக்கப்பட்ட 22 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்கள் பெயர்கள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன.