அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு இன்று வெளியானது. இதில், 19 லட்சம் மக்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதுவின் குடும்பத்தார், எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் அனந்த குமார் மாலோ ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் இடம்பெறாமல்போனது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து, ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் ஓவைசி கூறுகையில், "பாஜக ஒரு பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும். இந்துக்கள், இஸ்லாமியர்கள் என்ற அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைபடுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
"மதத்தின் அடிப்படையில் என்ஆர்சி-யை நடைமுறைபடுத்தாதீர்கள்" - ஓவைசி - என்.ஆர்.சி
ஹைதராபாத்: மதத்தின் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைபடுத்தாதீர்கள் என மக்களவை உறுப்பினர் ஓவைசி தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் சட்டவிரோத குடியேறிகள் இருப்பதாக பரப்பப்பட்ட வதந்தி தற்போது நொறுங்கியுள்ளது. குடிமக்கள் சட்ட மசோதாவில் திருத்தம் கொண்டுவந்து இஸ்லாமியர் அல்லாதவர்கள் அனைவருக்கும் பாஜக குடியுரிமை வழங்கிடுமா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. அப்படி செய்தால் அது சமத்துவத்திற்கு எதிரானது. அசாம் மாநிலத்தில் பெற்றோர்கள் பெயர் என்ஆர்சி-யில் இடம்பெற்றுள்ளதாகவும், குழந்தைகளின் பெயர் நீக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களுக்கு நீதி கிடைத்தும் என நம்புகிறேன்" என்றார்.