மக்களவையில் நேற்று காரசார விவாதம் நடந்தது. அப்போது மோடி, நேரு குடும்பத்தை சாராத பிரதமர்களை காங்கிரஸ் சிறப்பிக்கவில்லை எனவும், மன்மோகன் சிங், நரசிம்ம ராவ் போன்ற தலைவர்களை காங்கிரஸ் கவுரவிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
மோடிக்கு ஒவைசி பதிலடி - ஒவைசி
டெல்லி: நேரு குடும்பத்தைச் சார்ந்த பிரதமர்களை தவிர வேறு யாரையும் காங்கிரஸ் சிறப்பிக்கவில்லை என பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார்.
OWAISI
ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆயினும் பிரணாப் முகர்ஜிக்கு ’பாரத ரத்னா’ வழங்கி பாஜக சிறப்பு செய்தது என தெரிவித்தார். இதற்கு இன்று பதிலடி கொடுத்துள்ள மக்களவை உறுப்பினரும், மஜ்லிஸ் கட்சியின் தலைவருமான ஒவைசி, " பாஜகவில் இருந்து ஒரு இஸ்லாமியர் கூட மக்களவை உறுப்பினராக வரவில்லை. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோதுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பிரதமராக இருந்தபோதிலும் அவரால் அதனைக் காப்பாற்ற முடியவில்லை" என்றார்.