தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிளாஸ்மா தானம் செய்த அஸ்ஸாம் காவல் துறையினர்

கவுகாத்தி: கரோனா வைரஸிலிருந்து மீண்டு வந்த அஸ்ஸாம் மாநில காவலர்கள் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்.

காவல் துறையினர்
காவல் துறையினர்

By

Published : Aug 2, 2020, 10:20 AM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இத்தொற்று நோய் பரவலுக்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும், வேறு சில மருத்துவ முறைகள் கையாளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், மிக முக்கியமாகக் கருதப்படுவது பிளாஸ்மா தானம். கரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்கள் தங்களது பிளாஸ்மாவை, கரோனா பாதித்தவர்களுக்கு தானம் செய்வதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்த 44 காவலர்கள் தங்களது இரத்த பிளாஸ்மாவை தானமாகக் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து அம்மாநில அரசு கூறுகையில், கரோனா வைரஸிலிருந்து மீண்டு வந்த 67 காவலர்கள் பிளாஸ்மா தானம் கொடுக்க முன்வந்தனர். ஆனால், அவர்களில் 44 பேர் மட்டுமே பிளாஸ்மா தானம் கொடுக்க தகுதி அடைந்தார்கள். அவர்கள் அனைவரையும் சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பாராட்டியுள்ளார் என்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா கூறுகையில், "கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களைக் காப்பாற்ற, பிளாஸ்மா நன்கொடையாக வழங்க அஸ்ஸாம் காவல் துறை முன்வந்துள்ளது, பாராட்டுக்குரியது" என்று கூறியுள்ளார்.

பிளாஸ்மா தானம் செய்த அஸ்ஸாம் காவல் துறையினர்

இதையும் படிங்க:தயங்காமல் பிளாஸ்மா தானம் செய்வோம்! சக உயிர்களைக் காப்போம்! - முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details