தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ம.பி முதலிடம் - Over 1.75 lakh rapes in India

டெல்லி: பாலியல் வன்கொடுமை குறித்த வழக்குகள் அதிகம் பதிவாகும் மாநிலங்களில் மத்தியப் பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

NCRB
NCRB

By

Published : Mar 20, 2020, 7:19 PM IST

இந்தியாவில் 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 1.75 லட்சம் பாலியல் வன்கொடுமை குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிவித்துள்ளது. இதில் 2014ஆம் ஆண்டு மட்டும் வழக்குகள், 2015ஆம் ஆண்டு 34,094 வழக்குகள், 2016ஆம் ஆண்டு 38,947 வழக்குகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2017ஆம் ஆண்டு 32,559 பாலியல் வன்புணர்வு வழக்குகள், 2018ஆம் ஆண்டு 33,356 ஆக உயர்ந்தது. இந்த ஐந்தாண்டு காலத்தில், மத்தியப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 25,259 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக, உத்தரப் பிரதேசத்தில் 19,406 வழக்குகளும், ராஜஸ்தானில் 18, 542 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் 15,613 வழக்குகளும், டெல்லியில் 8,693 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டு, பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றத்தில் 8.8 விழுக்காடு குற்றங்கள் பாலியல் வன்கொடுமை தொடர்புடையதே ஆகும்.

இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்

ABOUT THE AUTHOR

...view details