தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் புறநோயாளிகள் போராட்டம்!

புதுச்சேரி மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் புறநோயாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புறநோயாளிகள் போராட்டம்
புறநோயாளிகள் போராட்டம்

By

Published : Oct 3, 2020, 2:55 PM IST

புதுச்சேரி: அரசு மருத்துவமனை சுகாதாரத்துறை ஊழியர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

புதுச்சேரி காவல் ஆய்வாளர் சண்முக சுந்தரத்தின் தந்தை புதுவை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம்(அக் .1) சிகிச்சையின் போது இறந்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு சரியான சிகிச்சை அளிக்காததுதான் அவரின் இறப்புக்கு காரணம் என சண்முகசுந்தரம், அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்தவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உறுதி அளித்தும், சுகாதாரத்துறை ஊழியர்களை தாக்கியவர்களை கைது செய்த பிறகு தான் போராட்டம் கைவிடப்படும் என கூறி போராட்டம் தொடர்ந்து இன்று (அக்.3) இரண்டாம் நாளாக நடைபெற்று வருகிறது.

புறநோயாளிகள் போராட்டம்

இதனால் இன்று (சனிக்கிழமை) மருத்துவமனைக்கு வந்த புறநோயாளிகள், சிகிச்சை அளிக்க யாரும் முன்வராததால் ஆத்திரமடைந்து மருத்துவமனை அருகே உள்ள செஞ்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். நோயாளிகள் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு உடனே இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்நிலையில் மறியலில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து புறநோயாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.‌ ஆனாலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: கருவிழி மாற்று அறுவை சிகிச்சை: மதுரை அரசு இராசாசி மருத்துவமனை சாதனை

ABOUT THE AUTHOR

...view details