மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த சர்ச்சை சில காலமாக நிலவி வரும் நிலையில், இது குறித்து எதிர்கட்சிகள் பல முயற்சிகளை மேற்கொண்டு, இயந்திரத்தை தவறான வழிமுறையில் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்திருந்த நிலையில், இது தொழிற்நுட்பக் கோளாறு என்று தேர்தல் ஆணையமும் மழுப்பி வந்தது.
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த சர்ச்சை - ஒன்று கூடும் எதிர்கட்சிகள்! - BJP
டெல்லி: நடந்து முடிந்துள்ள ஐந்து மாநில சட்டப் பேரவை பொதுத்தேர்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் இல்லாமல் நடந்துவிடவில்லை. இந்தக் கோளாறுகளைத் ‘தொழிற்நுட்பக் கோளாறுகள்’ என்று தேர்தல் ஆணையமும், ‘திட்டமிட்ட மோசடி’ என்ற எதிர்க் கட்சிகளின் வாதமும் சில தினங்களாக சலசலக்கபட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து எதிர்கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் இன்று (01-02-2019) ஒன்றுகூடி, அடுத்த நகர்வு குறித்து முடிவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பழைய வாக்குச் சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையயும் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் உயர்மட்ட குழு தலைவர், டெரெக் ஒ பிரைன் கூறுகையில், இது குடிமக்களின் முக்கிய பிரச்சனை. தேர்தல் ஆணையத்திடம் இருந்து தெளிவான பதில் கிடைக்கும் வரை இதன் நம்பகத்தன்மைக் குறித்தும் வலியுறுத்துவோம் என்றார். வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த ஆய்வுகள் மேலும் பலப்படுத்தப்படும் என்று நிறைவு செய்தார்.