முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அவரின் பாதுகாவலர்களால் 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொல்லப்பட்டார். அவரைக் கொன்ற பாதுகாவலர்கள் சீக்கியர்கள் என்பதால், டெல்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் அவர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து, பல சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கமல்நாத், சஜ்ஜன் குமார் ஆகியோர் தலைமை தாங்கி நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரும் நடவடிக்கைகள்! - கமல்நாத்
சண்டிகர்: சீக்கியர்கள் படுகொலை தொடர்புடைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நானாவதி கமிஷன், கமல்நாத்தை குற்றவாளி என அறிவித்தது. பின்னர், அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அது திரும்பபெறப்பட்டது. ஆனால், சஜ்ஜன் குமாரை குற்றவாளி என அறிவித்த உயர் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், சீக்கியர்கள் படுகொலை தொடர்பான வழக்குகளை மீண்டும் விசாரிக்க உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் நிலையில், கமல்நாத்தை சிக்கவைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என பல்வேறு தரப்பினரால் கூறப்படுகிறது.