தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஆப்பரேஷன் முஸ்கான்': 4,000 குழந்தைகளை மீட்ட தெலங்கானா காவல் துறை! - child labourers

ஹைதராபாத்: பெற்றோர்களால் கைவிடப்பட்டு கொத்தடிமைகளாக இருந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை தெலங்கானா காவல் துறையினர் 'ஆப்பரேஷன் முஸ்கான்' மூலம் மீட்டுள்ளனர்.

ஆப்பரேஷன் முஸ்கான்

By

Published : Aug 2, 2019, 11:49 AM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காவல் துறையினர் ஆண்டுதோறும் ஆதரவற்ற, கொத்தடிமைகளாக, குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளவர்களை மீட்கும் 'ஆப்பரேசன் முஸ்கான்' திட்டத்தை செயல்படுத்திவருகின்றனர்.

இத்திட்டத்தின்படி, அம்மாநில காவல் துறையினர் 2019ஆம் ஆண்டில் மட்டும் 487 சிறுமிகள் உள்பட நான்காயிரத்து 97 பேரை மீட்டு அதிரடி காட்டியுள்ளனர்.

மேலும், காவல் துறையினர் கீழ்கண்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சட்டப்பிரிவுகள்:

  • கடத்தல்,அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் செய்ய வலியுறுத்தல் (பிரிவு 359 முதல் 374),
  • சிறார் நீதிச் சட்டம் 2015,
  • கொத்தடிமை (ஒழிப்பு) சட்டம் 1976,
  • குழந்தைத் தொழிலாளர் ( தடை மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் 2016

காவல் துறையினர் அளித்த 'ஆப்பரேஷன் முஸ்கான்'அறிக்கையின்படி மீட்கப்பட்ட மொத்த குழந்தைகளில்,

  • பிற மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகள்: 1192 பேர்
  • கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டோர்: 1000-க்கும் மேல்
  • செங்கல் சூளைகள், ரயில் நிலையங்கள், வாகனம் பழுது பார்க்கும் நிலையங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து: 1500-க்கும் மேல்

மீட்கப்பட்ட இந்தக் குழந்தைகள் மீண்டும் பணிக்கு திரும்பக்கூடாது என்பதற்காக பெரும்பாலான குழந்தைகள் உண்டு-உறைவிடப் பள்ளியில் சேர்க்கப்படவுள்ளனர். மேலும் மீட்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைகளும் (கவுன்சிலிங்) வழங்கப்பட்டன.

குழந்தைகள் மீட்பதில் நாடு முழுவதும் ஆப்பரேஷன் முஸ்கான், ஆப்பரேஷன் ஸ்மைல் என்ற இரு வகை ஆப்பரேஷன்களில் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

ஆப்பரேஷன் முஸ்கானின்படி மீட்கப்பட்ட குழந்தைகள் தொடர்பாக ஜூலையிலும், ஆப்பரேஷன் ஸ்மைலின்படி ஜனவரியிலும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details