தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கிராமப்புற மாணவர்களுக்கு கானல்நீராகும் ஆன்லைன் கல்வி! - தொலைதூர கனவு

கரோனா வைரஸ் நோயின் தாக்கத்தால் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. ஆனால், நாட்டில் உள்ள பல்வேறு கிராமங்களில் மோசமான இணைய சேவை கிடைப்பதால், மாணவர்கள் கல்விக் கற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

ஆன்லைன் கல்வி
ஆன்லைன் கல்வி

By

Published : Jul 16, 2020, 4:03 PM IST

Updated : Jul 16, 2020, 4:16 PM IST

இமாச்சலப் பிரதேசம் மாநிலம் கின்னவுர் என்ற மாவட்டத்தில் அடிப்படை இணைய வசதி கிடைக்காமல் கல்வி வகுப்புகளை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது.

பொதுவாக இணைய வகுப்புகளை நடத்த தற்காலத்திற்கு ஏற்ற வகையில் குறிப்பிடத்தக்க இணைய வசதிகள் தேவை.

ஆனால், கின்னவுர், ரிகங்பியோ போன்ற எல்லைப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் 2G இணைய சேவை கிடைப்பதே குதிரைக்கொம்பு. உண்மை இவ்வாறு இருக்க, இங்குள்ள மாணவர்களுக்கு இணைய வழி கல்வி என்பது தொலைதூர கனவாகவே உள்ளது.

கரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்படுத்திய நெருக்கடி காரணமாக வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயமாகியுள்ள நிலையில், இணைய வகுப்புகளுக்கு மாறிய மாணவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கல்வி பயின்றுவருகின்றனர்.

கின்னவுர் மாவட்டம்

இதனால், பெரும்பாலான கல்வி நிலையங்கள் இணையம் மூலம் வகுப்புகளை நடத்த தொடங்கியுள்ளன. ஆனால், இந்தியாவில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் இணைய வகுப்புகளை நடத்த வசதியில்லை. இதனால், கின்னவுர் போன்ற பல மாநிலங்களில் கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: இளைஞரிடம் அன்பை பொழியும் யானைக்குட்டி!

Last Updated : Jul 16, 2020, 4:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details