மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. மீண்டும் மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என பாஜக கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலிலும் சிவ சேனா உடனான கூட்டணியை தொடர வேண்டும் என பாஜக விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், "மோடியை விட்டு விலகிச் செல்பவர்கள் அழிந்து போவார்கள். அவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" என்றார்.
'மோடியை விட்டு விலகிச் செல்பவர்கள் அழிந்து போவார்கள்' - Maha CM
நாக்பூர்: 'மோடியை விட்டு விலகிச் செல்பவர்கள் அழிந்து போவார்கள், அவர்களை மக்களும் நம்ப மாட்டார்கள்' என மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் காட்டமாக விமர்சித்துள்ளார்.
தேவேந்திர பட்னாவிஸ்
பாஜகவில் இருந்து சில அரசியல் பிரமுகர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் இவ்வாறு கூறியுள்ளார்.