ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்திற்கு அருகேயுள்ள ஹந்தவாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஜம்முவில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை - ஹந்த்வாரா
ஹந்த்வாரா: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கித் சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இன்று அதிகாலை சம்பவ இடத்திற்கு சென்ற பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப்படையினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கித் தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
மற்றொரு பயங்கரவாதி பாதுகாப்பு படையினரிடம் சிக்கினான். இந்நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதால் ஹந்த்வாரா பகுதியே பெரும் பதற்றத்துடன் காணப்படுகிறது.
மேலும் குப்வாரா பகுதிகளில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே கடந்த ஒருமாத காலமாக காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளதாலும், பல பகுதிகள் தொடர்ந்து பதற்றத்துடன் காணப்படுவதாலும் அம்மாநில மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் உருவாகியுள்ளது.