தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை, மத்திய அரசு திட்டம்! - ரேஷன் அட்டை

டெல்லி: நாடு முழுவதும் ஒரேவிதமான ரேஷன் அட்டை திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

RMV

By

Published : Jun 28, 2019, 10:48 AM IST

Updated : Jun 28, 2019, 11:14 AM IST

நாட்டின் உணவு பாதுகாப்பு குறித்து மாநில உணவுத்துறை செயலாளர்கள் கருத்தரங்கு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், நாடு முழுவதும் ஒரே விதமான பொதுவிநியோகத்திட்டத்தை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கிடையே தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து வேலைப்பார்க்கும் சூழல் தற்போது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பொதுவிநியோகத்திட்டத்தை குடிமக்கள் அனைவரும் பயன்படுத்த வழிவகை செய்யத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதற்காக நாடு முழுவதும் பயன்படுத்தும் வகையில் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வேலையில் மத்திய அரசு இறங்கியுள்ளதாக பஸ்வான் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் பஸ்வான்

ஆந்திரா, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஒருங்கிணைந்த பொதுவிநியோகத் திட்டம் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jun 28, 2019, 11:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details