தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவாவில் ஆறு பேருக்கு கரோனா பாதிப்பு - கரோனா பாதிப்பு

பனாஜி: சர்வதேச பயண வரலாறு பாரம்பரியங்களைக் கொண்ட கோவா மாநிலத்தில் ஆறு பேர் கரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

coronavirus in Goa  Goa  test positive for coronavirus  coronavirus  கோவாவில் 6 பேருக்கு கரோனா பாதிப்பு!  கரோனா பாதிப்பு  கோவா
coronavirus in Goa Goa test positive for coronavirus coronavirus கோவாவில் 6 பேருக்கு கரோனா பாதிப்பு! கரோனா பாதிப்பு கோவா

By

Published : Apr 3, 2020, 7:27 PM IST

உலகம் முழுக்க கரோனா (கோவிட்19) வைரசுக்கு பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச பயண வரலாற்றைக் கொண்ட கோவாவில் ஆறு பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலப் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஸ்வாஜித் ரானே கூறுகையில், “வடக்கு கோவாவில் உள்ள மாண்ட்ரெமில் வசிக்கும் நபர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர் மொசாம்பிக் நாட்டிலிருந்து கோவா திரும்பியவர் ஆவார்.

இவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்துவருகிறோம். தெற்கு கோவாவில் கரோனா நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவமனை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: பிரதமரின் ஒளி நடவடிக்கை மக்களின் வலி போக்குமா?

ABOUT THE AUTHOR

...view details