தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா வார்டு திறப்பதில் மோதல் - மே.வங்கத்தில் இளைஞர் உயிரிழப்பு! - மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச் சூடு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தனிமைப்படுத்தப்படும் மையம் திறப்பதில் இரு குழுக்கள் இடையே நடந்த மோதலில் இளைஞர் உயிரிழந்தார்.

coronavirus  COVID-19  quarantine  clashes  மே.வங்கத்தில் தனிமைப்படுத்தப்படும் மையம் திறப்பதில் மோதல்  மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச் சூடு  கரோனா பாதிப்பு, கரோனா அச்சுறுத்தல்
coronavirus COVID-19 quarantine clashes மே.வங்கத்தில் தனிமைப்படுத்தப்படும் மையம் திறப்பதில் மோதல் மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச் சூடு கரோனா பாதிப்பு, கரோனா அச்சுறுத்தல்

By

Published : Apr 6, 2020, 1:48 PM IST

மேற்கு வங்கத்தில் பிர்பும் மாவட்டத்தில், கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைக்காக உருவாக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையம் திறப்பதில் சனிக்கிழமை இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது இந்த மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில்," மாநிலத்தின் குக்கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தைத் திறக்கும் திட்டம் குறித்து அரசாங்க அலுவலர்கள் பரிசீலித்து சென்றபின்னர், இரு குழுக்கள் இடையே இந்த தகராறு தொடங்கியுள்ளது.

திடீரென இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தி மோதலில் ஈடுபடத்தொடங்கினர். அப்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இரு தரப்பும் குண்டுகளையும் கண்மூடித்தனமாக வீசியுள்ளனர். இந்த மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு இளைஞரும் காயமடைந்துள்ளார். நிலைமையைக் கட்டுப்படுத்த கிராமத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்” என்றார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு மேற்குவங்க காவல்துறை தொடர் விசாரணை நடத்திவருகின்றது.

ABOUT THE AUTHOR

...view details