இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி நள்ளிரவில், நாடு தழுவிய அவசர நிலையை (எமர்ஜென்ஸி) பிரகடனப்படுத்தினார்.
நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இன்றோடு 45 ஆண்டுகள் ஆகின்றன. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் செய்துள்ளார். அந்தச் ட்விட் செய்தியில், “45 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குடும்பம் அதிகார பேராசையில் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது.
ஒரே நாள் இரவில் தேசமே சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. பத்திரிகை, நீதிமன்றம், பேச்சுரிமை உள்ளிட்டவைகள் நசுக்கப்பட்டன. ஏழைகள், நலிந்தோர்கள் மீது அட்டூழியங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.