அரசியலமைப்பு சட்டம் 370ஆவது பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இதனிடையே பாஜக பிரமுகர் ஷேக் வசீம் பாரி, அவரின் சகோதரர் உமர் சுல்தான், தந்தை பஷீர் ஷேக் அகமது ஆகியோர் அடையாளம் தெரியாத பிரிவினைவாதிகளால் வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. அரசியல் கட்சி பிரமுகர்கள் தாக்குதலுக்குள்ளாவது தொடர் கதையாகிவருகிறது என்று காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.