நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து மக்களவையின் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (17.6.2019) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த இரண்டு நாட்களாக இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்பிக்கள் பதவியேற்றனர்.
மக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா! - மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா
டெல்லி: பாஜகவைச் சேர்ந்த ஓம் பிர்லா 17ஆவது மக்களவையின் சபாநாயகராக பதவியேற்றார்.
மக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா!
இந்நிலையில் நாடாளுமன்ற சபாநாயகராக, ராஜஸ்தான் கோட்டா-புந்தி மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக எம்.பியாக தேர்தெடுக்கப்பட்டுள்ள பாஜகவைச் சேர்ந்த ஓம் பிர்லா இன்று பதவியேற்றார். ஓம் பிர்லாவை சபாநாயகராக நியமிக்கும் தீர்மானத்தை பிரதமர் மோடி முன்மொழிந்தார்.