ராஜஸ்தான் மாநிலம் கோடா மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஓம் பிர்லா 17ஆவது மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ராம்நாராயண் மீனாவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றார்.
மக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா? - ஓம் பிர்லா
டெல்லி: 17ஆவது மக்களவையின் சபாநாயகராக பாஜக மக்களவை உறுப்பினர் ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓம் பிர்லா
16ஆவது மக்களவையின் சபாநாயகராக இருந்த சுமித்ரா மகாஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. அப்போதிலிருந்தே சபாநாயகர் யார் என்ற கேள்வி பலரால் முன்வைக்கப்பட்டது. தற்காலிக சபாநாயகராக உள்ள வீரேந்திர குமார் 300 மக்களவை உறுப்பினர்களுக்கு மேல் நேற்று பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.