நேபாளத்தின் புதிய வரைப்படத்தால் இந்தியா - நேபாளம் இடையே எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. நாட்டின் 74ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நேபாள நாட்டு பிரதமர் ஷர்மா ஒலி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், '' 74ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்திய அரசுக்கும், மக்களுக்கும் எனது வாழ்த்துகள். இன்னும் அதிக செழிப்புடன் இந்திய மக்கள் முன்னேற்றத்திற்கு வாழ்த்துகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறிய நேபாள பிரதமர்! - பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறிய நேபாள் பிரதமர்
நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நேபாள பிரதமர் ஷர்மா ஒலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
oli-makes-courtesy-call-to-pm-modi
இதனைத்தொடர்ந்து மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை தொடர்பு கொண்ட நேபாள பிரதமர் ஒலி, கரோனா சூழல் குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க:இந்திய இறையாண்மை மீதான மரியாதை அனைத்துக்கும் மேலானது - பிரதமர் மோடி