ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பையின் எடை கூடுதலாக இருந்துவருவதாக பெற்றோர் குற்றம்சாட்டிவந்தனர். அதை கவனித்தில்கொண்டு அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
மாணவர்களின் சுமையை குறைத்து ஒடிசா அரசு உத்தரவு! - school childrens books baggage
புவனேஷ்வர்: பள்ளி மாணவர்களின் புத்தகப்பையின் கூடுதல் சுமையை குறைக்கக் கோரிய உத்தரவை, மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டி ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள்
அதன்படி, பள்ளிகளில் அந்தந்த பாடங்களின் புத்தகங்களுடன், எழுதுவதற்கு தேவைக்கேற்ப நோட்டு புத்தகங்களை மாணவர்கள் சுமந்து வந்தால் போதும். அதனை முழுமையாக பின்பற்ற காலக்கெடுவையும் விதித்துள்ளது.
மேலும், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் இதை பின்பற்றுகிறார்களா? அதற்கு தனியார் பள்ளிகள் பாதகம் விளைவிக்கக்கூடிய வகையில் செயல்படுகிறதா? உள்ளிட்டவற்றை கண்காணித்து உறுதிப்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.