தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 16, 2020, 8:56 PM IST

ETV Bharat / bharat

ஒடிஸா: கர்ப்பிணியை 4 கிமீ சுமந்துச் சென்ற உறவினர்கள்!

சாலை வசதி சரிவர இல்லாததால், கர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்க்க உறவினர்கள் 4 கிலோ மீட்டர் தூரம் சுமந்துச் சென்றுள்ளனர். அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தும் சரியான நேரத்திற்கு கிராமத்தை சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது.

ஒடிசா
ஒடிசா

நுபாடா (ஒடிஸா): சாலை வசதி சரிவர இல்லாததால் கர்ப்பிணியை 4 கிலோமீட்டர் தூரம் உறவினர்கள் சுமந்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சாலை இணைப்பு சரியாக இல்லாததால் அவசர ஊர்தி சரியான நேரத்தில் கிராமத்தை அடையத் தவறியதாக உறவினர்கள் கூறியுள்ளனர். அதனால் கர்ப்பிணிப் பெண்ணை 4 கி.மீ தூரத்திற்கு தற்காலிக டோலி அமைத்து தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

கர்பிணியை சுமந்து சென்ற உறவினர்கள்

இந்த சம்பவம் நுபாடா மாவட்டத்தின் கதியாலா தொகுதியில் உள்ள சமத்பதர் கிராமத்தில் நடந்துள்ளது. கர்ப்பிணி ரெமதி மஜியை, அவரது கணவர் காகேஷ்வர் மஜி உடன் பல கிராமவாசிகள் இணைந்து ஆபத்தான நிலையில் 4 கிலோ மீட்டர் சுமந்துச் சென்று அவசர ஊர்தியில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

ABOUT THE AUTHOR

...view details