தமிழ்நாடு

tamil nadu

'மனைவியைப் பிரித்துவிட்டார்கள்' - கதறிய தன்பாலின ஈர்ப்பாளருக்கு ஆதரவாகத் தீர்ப்பு!

By

Published : Aug 28, 2020, 7:23 AM IST

புவனேஷ்வர்: மனைவியைப் பிரித்துவிட்டார்கள் என்று தொடுக்கப்பட்ட வழக்கில், தன்பாலின தம்பதி சேர்ந்து வாழ முழு உரிமை உண்டு என்றும் அப்பெண் மனுதாரருடன் சேருவதைக் காவல் துறை உறுதிசெய்ய வேண்டும் எனவும் ஒடிசா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

odish
di

ஒடிசாவைச் சேர்ந்த 24 வயதான தன்பாலின ஈர்ப்பாளர் ஒருவர், ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.

அந்த மனு நேற்று நீதிபதிகள் எஸ்.கே. மிஸ்ரா, சாவித்ரி ரத்தோ ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய மனுதாரர், "எனது மனைவியை அவரது மாமாவும், தாயும் வலுக்கட்டாயமாக ஜஜ்பூரில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள்.

அங்கு மற்றொரு நபருடன் அவளுக்குத் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். வேறுவழியின்றி நீதிமன்றத்தை நாடியுள்ளேன். எங்களைச் சேர்த்துவையுங்கள்" என நீதிபதியிடம் வேண்டினார்.

பின்னர் பேசிய நீதிபதி எஸ்.கே. மிஸ்ரா, "பாலியல் விருப்பத்தைத் தீர்மானிக்க இருவருக்கும் உரிமை உண்டு. மனுதாரருடன் அப்பெண் சேருவதை காவல் துறையினர் உறுதிசெய்ய வேண்டும்" என ஜஜ்பூர் காவல் துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி சாவித்ரி ரத்தோ, "அப்பெண்ணைப் பார்க்க மனுதாரரின் தாயார், சகோதரிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வது அரசின் கடமையாகும்.

இவ்வுலகில் பாலின அடையாளத்தைப் பொருட்படுத்தாமல் உரிமைகளை மனிதர்கள் முழுமையாக அனுபவிக்க முழு சுதந்திரம் உள்ளது. நீதித் துறை தலையீட்டின் காரணமாக அப்பெண் மனுதாரருடன் சேருகிறார் என்றாலும், ஒருவேளை அப்பெண் மனுதாரரை விட்டுவிலக விரும்பினாலும் அல்லது தனது தாயிடம் திரும்பிச் செல்ல விரும்பினாலும் தாராளமாகச் செல்லலாம்.

எந்தவிதமான தடையும் இல்லை. அவர்களின் முடிவை சமுதாயம் ஆதரிக்க வேண்டும். இருவரும் மகிழ்ச்சியான, இணக்கமான வாழ்க்கையை நடத்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details