ஒடிசா மாநிலம் நாப்ரங்பூர் மாவட்டம் பாகாசியுனி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது நிவாகுசா கிராமம். சில நாட்களுக்கு முன்பு, இந்த கிராமத்தில் உள்ள சில கால்நடைகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
செய்வினை வைத்ததாக சந்தேகம்: வெண்ணீர் ஊற்றிய கிராம மக்கள் - cow dung
நாப்ரங்பூர்: ஒடிசாவின் நிவிகுடா கிராமத்தில் செய்வினை வைத்தாக சந்தேகப்பட்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது வெண்ணீர் ஊற்றிய மூன்று பேரை, காவல் துறையினர் கைது செய்தனர்.
இதில் சந்தேகமடைந்த கிராமமக்கள், அப்பகுதியில் வசிக்கும் பான்மாலி ஜானி குடும்பத்தினர் தான் செய்வினை வைத்துவிட்டதாக கருதி, செவ்வாய்க்கிழமையன்று அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கு, மாட்டு சானத்தை வெண்ணீரில் கரைத்து அக்குடும்பத்தினரின் கைகளில் ஊற்றினர். இதில், பலத்த காயமடைந்த பான்மாலி, அவரது மனைவி, மகள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த வனப்ராங்பூர் காவல்துறையினர், அந்த கிராமத்தைச் சேர்ந்த மூவரை கைது செய்தனர்.