சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு 4 மாத ஊதியம் முன்பே வழங்கப்படும் - ஒடிசா முதலமைச்சர் - ஒடிசா முதலமைச்சர்
16:51 March 25
புவனேஸ்வர்: சுகாதாரத் துறை அலுவர்களுக்கு 4 மாத ஊதியத்தை முன்கூட்டியே தருவதாக ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
உலகை அச்சுறுத்திவரும் கரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருப்பதால், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகளவில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 512 பேருக்கு கரோனா பாதிப்பு, 9 பேர் உயிரிழப்பு என சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் சுகாதாரத் துறை பணியாளர்கள் நேரம் பார்க்காமல் மக்களுக்காக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு முன்பே ஊதியத்தை வழங்க வேண்டும் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், ஒடிசா மாநில முதலமைச்சர் அதனை செயல்படுத்தியுள்ளார். சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு 4 மாத ஊதியத்தை முன்பே வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.