தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் 79 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு! - கரோனா மொத்த பாதிப்பு

டெல்லி: இந்தியா முழுவதும் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 லட்சத்தை கடந்துள்ளது.

India  total cases has crossed 79 lakh!
India total cases has crossed 79 lakh!

By

Published : Oct 26, 2020, 10:13 AM IST

Updated : Oct 26, 2020, 10:24 AM IST

உலகளவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இச்சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 45 ஆயிரத்து 149 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 480 பேர் உயிரிழந்துள்ளனர். 59 ஆயிரத்து 105 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 79 லட்சத்து 9 ஆயிரத்து 960ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 14ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 71 லட்சத்து 37 ஆயிரத்து 222ஆகவும் அதிகரித்துள்ளதாக, சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கரோனா பரவல்: அடுத்த 3 மாதங்கள் மிக முக்கியமானது - ஹர்ஷ் வர்தன்

Last Updated : Oct 26, 2020, 10:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details