காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கவும் காஷ்மீர் மக்களின் நிலை குறித்து தெரிந்துகொள்ளவும் முயற்சித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட பலருக்கும் காஷ்மீருக்குள் நுழைய மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது.
காஷ்மீரில் இயல்நிலை திரும்பிவிட்டதாகவும், மாநிலம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் தொலைதொடர்பு வசதிகள் இயங்கி வருவதாகவும் ஜம்மு-காஷ்மீர் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.