மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தைச் சேர்ந்த ப்ரோச்சியா (28), காங்கிரஸ் கட்சி மாணவர் அமைப்பின் மாண்ட்லா மாவட்டச் செயலாளராக இருந்தார். இவர் நேற்றிரவு தனது மாமாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பின்பு புறநகர்ப் பகுதியின் சாலையோரத்தில் வந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு செயலாளர் சுட்டுக்கொலை! - மாணவர் அமைப்புச் செயலாளர் சுட்டுக்கொலை
போபால்: காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது இவரின் இருசக்கர வாகனம் யாதவ் என்பவரின் நான்கு சக்கர வாகனத்தின் மீது மோதியதாகவும், அதில், ஆத்திரமடைநந்த யாதவ் ப்ரோச்சியாவை சுட்டுக்கொலை செய்ததாகவும் காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், ப்ரோச்சியாவும், அவரது அமைப்பும் யாதவ் மீது பல முறை காவல் துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், பழி தீர்ப்பதற்காக திட்டுமிட்டு ப்ரோச்சியாவை யாதவ் சுட்டுக்கொலை செய்துள்ளார் என்றும் காங்கிரஸ் கட்சி மாணவர் அமைப்பின் மாண்ட்லோ மாவட்டத் தலைவர் அகிலேஷ் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:வி.ஹெச்.பி. பிரமுகர் பட்டப்பகலில் படுகொலை! ஆன்லைனில் உலாவும் வைரல் வீடியோ