மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள கந்த்வா பகுதியில் மாடுகளை வதைத்தாக கூறி மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஆளும் காங்கிரஸ் அராங்கம் பயன்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பசுக்களை வதைத்தற்கு தே.பா சட்டம் -காங். அரசு அதிரடி
கந்த்வா: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுமாடுகளை வதைத்ததாக 3 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்தியுள்ளது ஆளும் காங்கிரஸ் அரசு.
இதுவரை பாஜக ஆளும் மாநிலங்களே பசுக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தந்த நிலையில், தற்போது காங்கிரஸ் அரசாங்கமும் இப்பிரச்சனைக்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் போன்ற வலிமைமிக்க சட்டத்தை பயன்படுத்தியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்தான் பசுவதை குறித்த கலவரங்களும், அதை ஒடுக்க தனிச் சட்டங்களும் அமைச்சகங்களும்கூட அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் அரசின் இந்த செயல்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.