குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து நடைபெற்ற கலந்துரையாடலில் பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா பேசிய கருத்து சர்ச்சையானது. அதில், தன்னுடைய வீட்டில் கட்டடப்பணி செய்யவந்த பணியாளர்களில் சிலர் ’போகா’ என்ற ஒருவகை உணவை உண்டதாகவும் அது வங்கதேசத்திலிருந்து வந்த உணவு என்பதால் அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறினார். மேலும், இது குறித்து விசாரித்த உடன் அந்தப் பணியாளர்கள் வேலையை விட்டுச்சென்றதாகவும் அவர் கூறினார்.
அவரின் இந்தக் கருத்தை சமூக வலைதளவாசிகள் வறுத்தெடுத்தனர். ஒரு பதிவர், “என் வீட்டு பணியாளர் பர்கர் சாப்பிடுகிறார். அவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கிறேன்” என்று நக்கலாக பதிவிட்டிருந்தார். இதேபோன்று பலரும் கிண்டலாக பதிவுசெய்திருந்தனர். தற்போது மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசியும் இவ்விஷயம் குறித்து ட்விட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.