தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கங்கையில் பாவங்கள் மட்டுமல்ல; கரோனாவும் அழியும்' - ஐடியா சொல்லும் பேராசிரியர்

வாரனாசி: கங்கை நிதியில் உள்ள பாக்டீரியோபேஜ்கள் மூலம் கரோனாவை அழித்துவிடலாம் என பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் யு.கே. சௌத்ரி தெரிவித்துள்ளார்.

By

Published : May 21, 2020, 3:57 PM IST

கங்கை
கங்கை

கரோனா வைரசை அழிப்பதற்கு கங்கை நதி நீரைப் பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடத்துமாறு என்.எம்.சி.ஜி. அமைப்பினர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துக்கு (ICMR) பரிந்துரைத்தனர். ஆனால், கங்கை நீரால் கரோனா அழியும் என்பதற்குக் கூடுதல் ஆதாரம் வேண்டுமெனக் கூறி ஐசிஎம்ஆர் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முன்னாள் பேராசிரியர் யு.கே. சௌத்ரி கங்கை நீரால் கரோனாவை விரட்ட முடியோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "கங்கை நீரில் பாக்டீரியாவை அழிக்கும் தன்மை கொண்ட பாக்டீரியோபேஜ்களின் எண்ணிக்கை அதிகமான அளவில் உள்ளன. நமது பழங்கால வேதங்கள், புராணங்கள் அடிப்படையில் கங்கை ஒரு மருத்துவ நீராகும். இமயமலையில் தோன்றும் மூன்று நதிகளில் ஒன்றான கங்கை மட்டுமே வெண்மை நிறத்தில் காட்சியளிக்கும். மற்ற இரண்டு நதிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது கங்கை நதி குறைவான ஆழத்திலிருந்து பாய்கிறது. கங்கையின் பாக்டீரியோபேஜ்களால் மண், நீர், காற்று வழியாக கரோனா வைரஸ் பரவுவதைத் எளிதாகத் தடுக்க முடியும்" என்றார்.

மேலும், கரோனாவை அழிப்பதற்கான விநோத ஐடியா ஒன்றையும் பேராசிரியர் யு.கே. சௌத்ரி தெரிவித்துள்ளார். அதன்படி, ”கங்கை நீரை அனைத்து அணைகள், தடுப்பணைகளுடன் கலக்க வைக்க வேண்டும். அவ்வாறு கங்கை நீர் கலக்கும்போது, பாக்டீரியோபேஜ்கள் அதிகமாகி நோய்க்கிருமிகளை அழிப்பதற்கு உபயோகமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:கரோனாவிற்கு மருந்தாக கங்கை நீர் தீர்வாகுமா - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சொல்வது என்ன?

ABOUT THE AUTHOR

...view details