தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வரவேற்கப்படும் ட்ரம்ப்: புறக்கணிக்கப்படும் கிராம மக்கள்! - Narendra Modi trump

காந்திநகர்: ட்ரம்ப், மோடி ஆகியோர் கலந்துகொள்ளும் மைதான திறப்பு விழாவுக்கு மோதேரா கிராம மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படாத காரணத்தால் அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Villagers
Villagers

By

Published : Feb 21, 2020, 10:52 PM IST

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதகளில் இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். குறிப்பாக அகமதாபாத், ஆக்ரா, டெல்லி ஆகிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், மோதேராவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கவுள்ளார்.

இந்தத் திறப்பு விழாவுக்கு மோதேரா மக்களை அழைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே, தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படாத காரணத்தை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 1983ஆம் ஆண்டு மைதானம் முதன்முதலில் கட்டும்போது தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

பழைய மைதானம் இடிக்கப்பட்டு புதிய மைதானம் 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. மைதானத்திற்குள்ளேயே கிராம மக்கள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இந்த மைதானத்தில்தான் காலிறுதி போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'பாகிஸ்தான் வாழ்க' என கோஷமிட்ட மாணவிக்கு நீதிமன்ற காவல்!

ABOUT THE AUTHOR

...view details