உத்தரப் பிரதேச மாநிலத்தின் பண்டா பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (21). இவர் டெல்லியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். கரோனா வைரஸ் பாதிப்பு டெல்லியில் அதிகமாகி வருவதால், மே 19ஆம் தேதி டெல்லியிலிருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதையடுத்து சொந்த வீட்டில் சுயதனிமைக்குத் தன்னை உட்படுத்தியுள்ளார்.
காதல் திருமணத்திற்கு ஒத்துழைக்காத பெற்றோர் - இளைஞர் தற்கொலை...! - காதல் திருமணத்திற்கு ஒத்துழைக்காத பெற்றோர்
காதல் திருமணத்திற்கு பெற்றோர் ஒத்துழைக்காததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று திடீரென மகேஷ், மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இதனையறிந்த உறவினர்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், '' ஜூன் 29ஆம் தேதி ரத்தாலி கிராமத்தின் வசிக்கும் மெஹோபா என்னும் பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால், மகேஷ் டெல்லியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவரது காதலுக்கு பெற்றோர் ஒத்துழைக்காமல், கட்டாய திருமணம் செய்ய முயற்சித்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்'' என தெரிவித்துள்ளனர்.