தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: 'பந்த்' அறிவித்த மாணவர் அமைப்பு! - 'பந்த்' அறிவித்த மாணவர் அமைப்பு

திஸ்பூர்: குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக டிசம்பர் 10ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர் அமைப்புகள் அறிவித்துள்ளன.

Bandh
Bandh

By

Published : Dec 7, 2019, 6:26 PM IST

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 1955ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்க வழிசெய்யாததை காங்கிரஸ், திரிணாமுல், திமுக, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்பட பல எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்தன. வங்கதேசத்திலிருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்களின் வருகையால் பூர்வகுடி மக்களின் உரிமை பறிக்கப்படும் என கருத்து வலுத்துவந்தது.

மத்திய அமைச்சரவை குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த நிலையில், டிசம்பர் 9ஆம் தேதி குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டிசம்பர் 10ஆம் தேதி 11 மணி நேரம் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பலம்வாய்ந்த வடகிழக்கு மாணவர் அமைப்பு அறிவித்துள்ளது.

வடகிழக்கு மாணவர் அமைப்பு சார்பாக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பு

வடகிழக்கு மாணவர் அமைப்பின் ஆலோசகர் சமுஜ்ஜால் குமார், "அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, நாகலாந்து, மிசோரம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர் அமைப்பு ஒன்றாகச் சேர்ந்து இந்தக் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தவுள்ளது. சட்டத்திருத்த மசோதாவால் ஆறாவது அட்டவணைக்கு எந்தப் பாதிப்பும் நிகழாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், ஆறாவது அட்டவணைக்கு கீழ் திரிபுரா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் வரவில்லை. இதன்மூலம் ஆறாவது அட்டவணை நீர்த்துப்போகும்" எனத் தெரிவித்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையில் வடகிழக்கு மாநிலங்களுக்கு சில சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உன்னாவ் பாலியல் சம்பவம்: பாஜகவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details