உலகில் எளிய விஷயத்தையும் வித்தியாசமான முறையில் செய்ய வேண்டும் என்று நினைக்கும் மனிதர்களுக்காகவே பிரத்யேகமாக, பறக்கும் உணவகத்தை உருவாக்கியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா பகுதியில் சாகசம் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவகையில் 160 அடி உயரத்தில் 'ஃப்ளை டைனிங்' (Fly Dining) என்று அழைக்கப்படும் பறக்கும் உணவகத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த உணவகம் தரை மட்டத்திலிருந்து சுமார் 160 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் அமர்வதற்கு 24 இருக்கைகளும், உணவு பரிமாறுபவர்களுக்கு நடுவில் ஒரு பகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த உணவகம் கிரேன் உதவியுடன் அந்தரத்திற்கு தூக்கிச் செல்லப்படும். மேலும் உணவகத்தில் சாப்பிடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதித்துள்ளது விடுதி நிர்வாகம்.
- ஃப்ளை டைனிங்கில் அமர்ந்து அதிகபட்சமாக 40 நிமிடங்கள் மட்டுமே உணவு சாப்பிட முடியும்.
- கர்ப்பிணிகள், குழந்தைகள் இருந்தால் 4 அடி உயரத்துக்கு மட்டுமே உயர்த்தப்படும்.
- மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே உணவகத்தில் சாப்பிட அனுமதி அளிக்கப்படும்.