திருப்பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய வைபவங்களில் ஒன்று பிரம்மோற்சவம். இது, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு பெரும் திருவிழா போல் நடைபெறும்.
இதுமட்டுமின்றி, இந்தாண்டு இரு பிரம்மோற்சவம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்து, கடந்த மாதம் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவம் மாடவீதி நடைபெறாமல் கோயிலுக்குள் தனிமையில் நடத்தப்பட்டது.
இந்நிலையில், திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் வருகிற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நடக்கவுள்ள நிலையில், தேவஸ்தான அலுவலர்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் இணைந்து கலந்துரையாடினர்.
அதில், பல முக்கிய முடிவுகள் தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, பக்தர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அக்.16ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடக்கவுள்ள நவராத்திரி பிரம்மோற்சவத்தையும் கோயில் வளாகத்திலே நடத்த முடிவு செய்துள்ளனர். இதில், உயர் அலுவலர்கள் மற்றும் பூசாரிகள் மட்டும் கரோனா விதிமுறைகளை பின்பற்றி கலந்துக்கொள்வார்கள்.
இதையும் படிங்க: தென் திருப்பதி கடவுளுக்கு காலணியை காணிக்கை வழங்கும் மக்கள்...!