தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணமில்லை! - மத்திய அரசு

டெல்லி: கரோனா அச்சத்தால் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணம் இல்லை என மத்திய அரசின் செயலர் ராஜிவ் கௌபா (Rajiv Gauba) தெரிவித்துள்ளார்.

Rajiv Gauba
Rajiv Gauba

By

Published : Mar 30, 2020, 12:16 PM IST

Updated : Mar 30, 2020, 1:08 PM IST

சமூக விலகலால் மட்டுமே கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க முடியும் என்பதால் பிரதமர் நரேந்திர மோடி 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்க வேண்டும் என அறிவித்தார்.

மார்ச் 25ஆம் தேதிமுதல் நடைமுறைக்குவந்த ஊரடங்கு ஏப்ரல் 14ஆம் தேதிவரை நீடிக்கவுள்ளது. இந்நிலையில் இந்த ஊரடங்கு காலம் நீட்டிக்கப்படவுள்ளதாக ஒரு தகவல் பரவியது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில் மத்திய அரசின் செயலர் ராஜிவ் கௌபா, ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றும், இதுபோன்ற தவறான கருத்துகள் எனக்கு ஆச்சரியம் அளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 27.5 லட்சம் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.611 கோடி செலுத்திய யோகி ஆதித்யநாத்!

Last Updated : Mar 30, 2020, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details